அதிபர் செய்தி
திரு.ம.சச்சிதானந்தம்
தி/கலைமகள் மகா வித்தியாலயம் திருகோணமலை நகரை அண்மித்து 4 கிலோமீற்றருக்கு அப்பால் அன்புவழிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ளது.1971-01-05 ஆம் திகதி முதலாம் வகுப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை க.பொ.த உயர்தர கலைப்பிரிவு வரை விஸ்தரிக்கப்பட்டு 1C தரப் பாடசாலையாக உயர்வு பெற்று 614 மாணவர்களுடன் காணப்படுகிறது.தற்போது அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.
இடைக் காலத்தின் நாட்டின் அசாதரண நிலை காரணமாக பல பின்னடைவுகளைக் கண்ட இப் பாடசாலை நகரக் கவர்ச்சி, பிரபல்யமான பாடசாலைகளின் கவர்ச்சி, வறுமையான பெற்றார்கள், உயர் வகுப்புகளுக்கான கற்றல் வசதியின்மை, நவீன கற்றல் வசதிகளின்மை, பௌதீக வளக்குறைபாடு, ஆளணிப்பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர் நோக்கி வருகின்றது.இருப்பினும் தேசிய மாகாண மாவட்ட வலய கோட்ட ரீதியில் இப் பாடசாலை மாணவர்கள் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பாடசாலைகளுக்கிடையிலான பல்வேறு மட்டப் போட்டிகளிலும் விருதுகளைப் பெற்றுள்ளனர். மேலும் இப் பாடசாலை கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்து வருகின்றது. இதற்கு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்இதிணைக்கள அதிகாரிகள்இஅரச சார்பற்ற நிறுவனங்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெரும் உதவி செய்து வருகின்றனர்.பௌதீக ரீதியான வளங்களும் மிக வேகமாக அதிகரித்துவருகின்றது.
பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் பாடசாலையின் சகல நடவடிக்கைகளும் முன்னேற்றகரமான நிலையை அடைந்து வருகின்றது.தற்போது முன்மொழியப்பட்டுள்ள பாடசாலை மேம்பாட்டுத்தடை;டத்தின் மூலம் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் பாரிய முன்னேற்றத்தை சகலதுறைகளிலும் ஏற்படுத்த முடியுமென்பது எனதும் பாடசாலைச் சமூகத்தினதும் எதிர்பார்ப்பாகும்.
திரு.ம.சச்சிதானந்தம்
அதிபர்
தி/கலைமகள் மகா வித்தியாலயம்.







