வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
திருமலை நகரில் வளர் அன்புவழிபுரமதில்
கலைமகள் மகாவித்தியாலயம் என்றும் வாழ்கவே (வாழ்க)
ஆதி அந்தம் இல்லாத ஆண்டவன் தெய்வம்
அன்னையும் பிதாவும் எங்கள் முன்னெறி தெய்வம்
அன்போடு கலைகள் தரும் ஆசிரியர் தெய்வம்
அனுதினமும் அடிபணிந்து இனிது வாழுவோம் (வாழ்க)
செங்கதிரும் தண்மதியும் இளந்தென்றலும்
எங்கள் கலை கோயில் வளர் இல்ல விளக்கை
மங்கையரும் மைந்தர்களும் மாண்பு பெறவே
பொங்கும் புகழ் பொலிகவென்று போற்றி வளர்ப்போம் (வாழ்க)
கடமையோடு கண்ணியமும் கட்டுப்பாடும்
உடலுறுதிக் கலைகளோடு உயர் கலைகளும்
திடமுடனே தீந்தமிழும் சேர்ந்து தெளிந்தே
மடமையிருளைப் போக்கி ஞான மதியை வளர்ப்போம் (வாழ்க)