பாடசாலையின் வரலாறு
திருகோணமலைப் பகுதியின் புறநகர்ப்பகுதியில் நகருக்க அண்மித்ததாக 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அன்புவழிபுரம் கிராமத்தில் 1971-01-05ந் திகதி திரு.மு.மகாதேவன் அதிபர் அவர்களால் சமூகத்தின் ஒத்துழைப்புடன் வகை-iii நிலையில் திஃகலைமகள் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
மாலை வேளையில் ஊரவர்கள் ஒன்றுகூடும் தற்காலிகக் கொட்டில் நலன் விரும்பிகளின் உதவியுடன் கதிரை மேசைகள் பெறப்பட்டு அவ்விடம் பாடசாலையாக மாற்றப்பட்டிருந்தது.1961ஆம் ஆண்டில் இருந்து 20 வருடங்களாக 30 பேர்ச்சஸ் காணியில் இயங்கியது.
1990ஆம் ஆண்டு அசாதாரண நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இப் பாடசாலையில் தங்கியிருந்தனர்.அதன் பிறகு பாடசாலை தனது இயல்பு நிலையை இழந்திருந்தது.பின்னர் மீட்சி பெற்ற நிலையில் 1991ல் தரம் 6 வரை மாணவர்கள் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டது.1992ஆம் ஆண்டின் பின் ஆசிரியர் விடுதிகள்இமனைப் பொருளியல்இவிஞ்ஞான ஆய்வுகூடங்கள்இஇரு மாடிக் கட்டடங்கள் என்பன பாடசாலைக்க வழங்கப்பட்டது.1996ம் ஆண்டில் க.பொ.த(சஃத) வகுப்புக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இப் பாடசாலை அமைந்துள்ள காணியானது சதுப்பு நிலமாக இருந்தமையால் பின்னர் அது நலன் விரும்பிகளின் உதவியுடன் தளத்திற்கு கிரேவல் இடப்பட்டு சீர்செய்யப்பட்டது.1997ற்குப் பின்னர் நூலகம் மற்றும் வகுப்பறை கொண்ட இரு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இப் பாடசாலையில் தங்கியிருந்தனர்.அதன் பின்னர் இப் பாடசாலைக்கென 3 மாடிக் கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.2010ம் ஆண்டு பாடசாலைக்கென்று விளையாட்டு மைதானம் ஒன்று பெறப்பட்டது. 2010ம் ஆண்டில் க.பொ.த(உஃத) கலைப்பிரிவு வகுப்பு வைப்பதற்கான அனுமதி கிடைத்தது.
2012இன் பின் கவின்நிலை தொடர்பான கவனம் செலுத்தப்பட்டது.தொடர்ந்தும் 5ம் தர புலமைப்பரிசில்இ க.பொ.த(சஃத)இ க.பொ.த(உஃத) போன்ற வகுப்புகளின் பெறுபேறுகள் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.அதே வேளை சமூகத் தொடர்புஇகலாசார விழுமியங்கள்இதொடர்பாடல் செயற்பாடுகள் என்பன முன்னேற்றகரமான நிலையை அடைந்துள்ளன. மேலும் பௌதீக ரீதியான வளர்ச்சி முன்னேற்றம் கண்டுள்ளது.தற்போது இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றும்இஆரம்பப்பிரிவுக்கான கற்றல் வள நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.மலசலகூட வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது எமது பாடசாலை 592 மாணவர்களுடன் மகா வித்தியாலயமாக காணப்படுகிறது.எதிர்காலத்தில் உயர்தரப்பிரிவில் வணிகப்பிரிவும் ஆரம்பிப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.பல முன்னேற்றகரமான மாற்றங்களுடன் பாடசாலை பல உயர்ச்சிகளை காணவேண்டுமென்பதே எல்லோருடைய அவாவாகும்.







